அவங்களை சாமி தன்டிக்கும்

- எவ்வளவு தரம்யா சொல்ரது  வரிசையில் நடுலே பூராதேன்னு புத்தி இருக்கா

- ஏன் உனக்கு வேணுமா உன் வேலைய பாத்து போவியா ஒன்னாலே முடிஞ்ஜா நீ போ முன்னாலே 

- அப்போ இவ்வளவு நேரமா நிக்கரவங்க என்ன கேநயா

- யோவ் சும்மா பொத்திட்டு வாயா  லேடீசோட இருக்கியேன்னு பாக்கரேன்

- இல்லாட்டா என்ன பண்ணுவே

- சும்மா வாங்க உங்களோட வந்தாலே எப்போவும் இப்படிதான்

- கோவிலுக்கு வந்து இப்படிசெய்யலாமா ?  25௦ ருபா டிக்கட் போராமாதிரி போய் இந்த 5௦ ருபா டிக்கட் க்யூ லே பூர்ரான்

- என்ன அவங்க பத்து பேர் இருப்பாங்களா போய் தொலயட்டும்  இவ்வளவு நேரம் நினுட்டோமே  இந்த 1௦ நிமிஷத்துலே என்ன ஆகப்போது.  பதட்டப்படாமே சாமி பாத்தாதாங்க நிம்மதியாக இருக்கும்  சண்டை போட்டா அது தான் மனசுலே இருக்கும்  சாமி பாத்த திருப்த்தி இருக்காது   அவங்களை சாமி தன்டிக்கும்

- நீ எப்போவும் இப்படி தான்   அந்த வாட்ச்மேன் வேரே இவ்வளவு நேரம் வேடிக்கை பாத்துட்டு இப்போ வரான்

நேராக வந்த  வாட்ச்மேன் அந்த 1௦  பேர்கள் பின்னாடியே போய் அவர்கள் பின்னால் இருந்த கேட்டை பூட்டிட்டான்  எங்களை  சின்ன கேட்டை திறந்து அது வழி யாக அனுப்பி விட்டான்

- சாமி நான் எல்லா பாத்துட்டு தான் இருக்கேன்  நீங்க போனப்புரம் அவங்க அரை மணி கழித்து 25௦ டிக்கட்டில் வருவாங்க  நீங்க நிம்மதி யா போய் தரிசனம் செய்யுங்கள்

 

 

நான் வெகுளி இல்லை

-   கமலா எவ்வளவு தரம் சொல்ரது உனக்கு    இந்த கூடை காரி கிட்டே காய்    வாங்காதேன்னு

   அவ நல்ல உன்னை ஏமாத்தறா  சொத்தை பாதி காஞ்ஜது பாதி  வெட்டினத விட குப்பை தான் ஜாஸ்தி  விலையும் ஜாஸ்தி 

-   பாவங்க  ரண்டு மாடி ஏறி வரா  அஞ்ஜோ பத்தோ போனா போட்டுமே

-   அதுக்கு சொல்லலே  அவ உன்னை ஏமாந்தவன்னு  நெனைக்கரா

-   பரவால்லே  அடுத்தவங்களுக்கு உதவணும்

-   உன்னை திருத்த முடியாது  எப்படியோ போ.  அவ குரல் கேக்குது 

 

-  அம்மா அம்மா காயை ஓடிக்காதம்மா 

-   வெண்டிக்கா ஒரே முத்தல்  எனக்கு வேண்டாம்   அதுலே என்ன

-   பாவக்கா  கோஸ்

-  பாவக்கா வாடிச்சு  

-  சரி  நீ கோஸ் எடு  நா மாடிக்கு போய்  வெண்டிக்காயும்  பாவக்காயும் குடுத்துட்டு  வரேன்   அது நான் எதை குடுத்தாலும் வாங்கிக்கும்  வெகுளி

 

-   பாத்தியா கமலா நான் சொன்னது சரியா

-   சரி தாங்க  காய் வேண்டாம்னு அனுப்பிடுங்க  நான் வெகுளி இல்லேன்னும் சொல்லிடுங்க

-  ஐயா சாமி  நான் தெரியாம சொல்லிட்டேன்பா 

-  சரி சரி  மேலே ஏறி வந்ததுக்கு கொத்தமல்லி  கருவேபிலை குடு  இந்தா காசு

   அம்மா   வெகுளி இல்லே  அனா ரொம்ப நல்லவ   புரிஞ்சதா   வெளிலே    போகும்போது  நேத்தி வாங்கின காய் குப்பய போட்டுடு

-  ஐயா நாளைக்கு நல்ல காய் தரேன்னு அம்மா கிட்டே சொல்லு சாமி

 

 

  

 

 

புதியதோர் உலகு

- வாருங்கள் சார்   இவன் ராஜா  உங்கள் வகுப்பு லீடர்  இவனோடு செல்லுங்கள்

- குட் மார்னிங் சார்

- குட் மார்னிங்  நான் தான் உங்கள் புதிய சார்    இன்று  பாடம் வேண்டாம்  நம்மை பற்றி  தெரிந்து கொள்வோம்  சரியா.   நான் இது வரை கிராமத்தி லிருன் தேன்   நீங்கள் இதே ஊர் தானா

 - ஆமாம் சார் 

- மற்றவர்கள் 

- எல்லோரும் இதே ஊர் தான் சார்

- காலை என்ன சாப்பிட்டே  

- ஓட்ஸ்

- தினமும் என்ன சாப்பிடுவே

- பிரட்  கார்ன் ப்ளேக்  வாழப்பழம்

- இட்லி  தோசை சப்பாத்தி இது போல கிடயாதா

- அதல்லாம் ஹோட்டல் போனா தான்

- மதியம் லஞ்ச்

-  லெமன் ரைஸ்  சிப்ஸ் பாக்கெட்

- டின்னர்

= மம்மி டிவி சீரியல் முடிந்தபுரம் பிஸ்சா ஆர்டர் பண்ணு வாங்க அது தான்

- வீட்டில் தாத்தா பாட்டி

- அவங்களுக்கு ஷுகர்  அதனால்   பாட்டி கேழ்வரகு செஞ்சி சாப்பிடுவாங்க

- அப்பா

- தெரியாது  டெய்லி நான் தூங்கிடுவேன்

- சண்டே ஹோட்டல் போயிடுவோம்

- காய் பழம்  இதல்லாம் எங்கேந்து கிடைக்கிரது தெரியுமா

- ஓ  கடைலே

-  பால்

=  அது ஒரு அங்கிள் டெய்லி வீட்டுலே பாக்கெட் போட்டுடுவார்

=  நாய் பூனை ஆடு மாடு இதெல்லாம் இங்கே இருக்கா

-  எங்கேயோ இருக்கணும்  எங்க காம்பவுண்ட்ஸ் குள்ளே வாட்ச்மேன் உட

   மாட்டார்

=  சரி உங்க காம்பவுண்ட்ஸ் குள்ளே எவ்வளைவு வீடுகள் இருக்கு 

-  நூறு

- பசங்க

- தெரியாது சார்

- எல்லாரும் சேர்ந்து விளையாடும் பழக்கம் உண்டா

- மம்மி உடமாட்டாங்க  

- பக்கத்து வீட்டுலே யார் இருக்காங்க

- தெரியாது சார்

- சரி  நீ  வீட்டில் என்ன விளையாடுவே 

- டாப் லே அங்க்ரி பேர்டஸ் இல்லாட்ட கார்ட்டூன் பாப்பேன்

= தம்பி தங்கை இல்லையா

= யாருக்கும் இல்லை   எங்க கிளாஸ் லேயே சரவணனுக்கு தான் சிஸ்டர் உண்டு

 

- என்ன சார் கிளாஸ் போலயா  இவனோடவே  பேசின்டிருக்கீங்க

- ஒருத்தன் சொன்ன தகவலே எனக்கு புதுசா இருக்கு  

   இந்த உலகம் ரொம்ப மாரிடுச்சி.   நல்ல வேளை  இந்த  புதிய உலகைப் பார்க்க

   பாரதியோ பாரதி தாசனோ இல்லை 

 

 

 

என்ன பிரச்சனை

 

- இந்தா கமலா மாம்பழம் அப்பா என்ன விலை 

- யாரோட பேசிண்டிருந்தீங்க 

- யார்          ஓ நம்ப பங்கஜத் தோடு தான்

- போச்சு  அவள் இங்கு வராம போகமாட்டாள்  

- வந்தா என்ன 

- நீங்க தானே சொன்னீங்க மாம்பழம் விலை ஜாஸ்த்தின்னு  அவளுக்கு ஏன்        தரணும்

- ஒரு துண்டு  தந்தா போச்சு

- ஒண்னும் வேண்டாம்   முதல்லே பிரீட்ஜ்லே கீழே போட்டு மூடுங்க  அவ     போனப்புரம் சாப்பிடலாம்

இரண்டு நாளைக்கு பின் எடுக்கும் போது அழுகி விட்டது

-  ஐயய்யோ அழுகிடுச்சி  நான் அன்னிக்கே சாப்படலாம்னு சொன்னால் நீ   கேக்கலை  ஒரு துண்டு அவளுக்கு கொடுத்தாலும் மீதிய நாம் சாப்பிட்டிருக்கலாம்

- இப்போ உங்களூக்கு என்ன பிரச்சனை

- பழம் அழுகிடுச்சே அதுதான்

- அதுவா இல்லை அவளுக்கு கொடுக்கலைங்கரதா

- அப்பாடி  எனக்கு பழமே வேண்டாம்மா