கவிதை

May. 16, 2016

ஐம்பூதங்களுக்குள் போட்டி
யாருக்கு சக்தி அதிகம் என
நெருப்பாய் எரிக்கும்
சூரியனை மேகத்தால் 
மறைத்து வைக்கும் ஆகாயம்
மேகத்தை கரைத்து 
மழையாய் கொட்டும் நீர்
இரண்டையும் ஓட்டும் காற்று
வெய்யில் ஆனாலும் மழை புயல்
எதற்கும் அசையாத பூமி
நீங்கள் எல்லோரும் என் உள்ளே உறையும் பெருமானுக்குள்
அடக்கம் என அசை யாது
நிக்குது இந்த கோபுரம்

ஹேமா

May. 16, 2016

குழந்தைக்கு நடை பழக்க 
தாத்தா பாட்டி இல்லாத வீடு 
பூனை யாவது இருக்கே

தாத்தா பாட்டி யை விட்ட
முதியோர் இல்லத்தில்
பூனைக்கு அனுமதி இல்லையோ

May. 16, 2016

 

உடன் பிறப்பை வரவேற்க 
எத்தனை உல்லாசம்
அக்கா இரண்டாவது அன்னை
என நிறூபணம் செய்கிறாளோ?
முத்தான பெண்ணை பெற்ற 
இந்த பெற்றோர் எதிர்பார்ப்பது ஒரு
சிங்க குட்டியாய்த்தான் இருக்கும் 
காத்திருக்கும் இந்த காலத்தில் 
இந்த சுமையானதும் ஒரு சுகமே.

Nov. 7, 2015

 

 

கவிதை எழுத நினைத்தால் காதல் வருகிறது

காதல் வந்தால் கவிதை எழுதத் தோன்றுகிரது

இரண்டுக்கும் அப்படி என்ன தோழமை?

இரண்டையுமே அடுத்தவர் அனுபவித்தாலும் படைத்தாலும்

எல்லாராலும் ரசிக்க முடிகிறது

கதைகள் செய்திகள் உள்ள பக்கத்தை புரட்ட முடிந்த நமக்கு

கவிதை உள்ள பக்கத்தை படிக்காமல் மூட முடியவில்லை

மரபுக்கவிதைகள் போய் புதுக்கவிதைகள் வந்தாலும்

கவிதைகள் இதனால்தான் காணாமல் போகவில்லை

 

Nov. 7, 2015

ஓ மனமே 

 

நீ ஏன் இப்படி மாறி மாறி என்னை வதைக்கிறாய்

உனக்கு பிடிக்காததை யார் செய்தாலும்

அவரை பார்க்கும் போது பீஸ் பீஸ் ஆக கிழிக்க

என்ன என்னவோ எண்ணி ஒத்திகை பார்த்து

அவர் நேரில் வந்து உன்னைப் பார்த்து

சாரி என்று சொன்னதும் நீயும்

சரி போகட்டும் என்று விட்டு விடுராயே

நீ நல்லவளா கெட்டவளா